Monday, 29 June 2015

கிழக்கில் சுனாமியினால் வீடு இழந்தோர் தவிப்பு கொழும்பில் முஸ்லிம் காங்கிரஸின் கொண்ட்டாட்டம்

முஸ்லிம் காங்கிரஸின் ஏற்பாட்டில் இன்று 2015-06-28 இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் கலந்து கொண்ட கௌரவ அமைச்சர் மன்சூர் அவர்கள்.
முஸ்லிம் காங்கிரஸின் ஏற்பாட்டில் இன்று 28 ஆம் திகதி கொழும்பு பத்தரமுல்ல ஹொட்டல் ஒன்றில் இடம்பெற்ற இப்தார் (நோன்பு திறக்கும் வைபவம்) நிகழ்வு முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.
இப்தார் நிகழ்வின் பின்னர் மஃரிப் தொழுகை இடம்பெற்றது. தொழுகையின் பின்னர் இரவுச் சாப்பாடும் பரிமாறப்பட்டது.
இந்நிகழ்வுகளில் வெளிநாட்டுத் தூதுவர்கள், முன்னாள் வர்த்தக, வாணிபத்துறை அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ரி.ஹஸனலி, பைஸல் காசீம் , மாகாண அமைச்சர் மன்சூர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், வட மேல் மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி றிஸ்வி ஜவஹர்ஷா, மேல் மாகாண சபை உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான், அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர், கல்முனை மாநகர மேயர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், பிரதி மேயர் ஏ.எல்.அப்துல் மஜீட். மற்றும் மாநகர,பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையான பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தன.



Loading...