சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் யுத்த குற்றங்களுக்காக வேண்டப்படும் சூடான் ஜனாதிபதி ஒமார் அல் பஷீர் தென் ஆபிரிக்காவை விட்டு வெளியேறியுள்ளார்.
ஆபிரிக்க ஒன்றிய உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் ஜொஹனஸ்பேக், சென்றிருந்த வேளையில் அவரை கைது செய்யும்படி சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் வேண்டுகோள் விடுத்திருந்தது.
சூடான் ஜனாதிபதியினை கைது செய்து குற்றவியல் நீதிமன்றத்திடம் கையளிக்காததன் மூலம் நாட்டின் அரசியல் யாப்பு மீறப்பட்டுள்ளதாக தென் ஆபிரிக்க நீதிபதி டன்ஸ்ரன் மிலாம்போ குறிப்பிட்டுள்ளார்.
டாவூர் மோதலின் போது, சூடான் ஜனாதிபதி ஒமார் அல் பஷீர் பல்வேறு யுத்த குற்றங்கள், மனிதாபிமானமற்ற குற்றங்கள் மற்றும் இன ஒழிப்பு நடவடிக்கைகளில் வகை தொகை இன்றி ஈடுபட்டார் என குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.
2003ஆம் ஆண்டு முதல் சூடான் மக்கள் 3 லட்சம் பேர் வரை கொல்லப்பட்டனர்.
இது தவிர 14 லட்சம் மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறிய நிலையில் தொடர்ந்தும் வாழ்வதாக ஐக்கிய நாடுகளின் புள்ளி விபரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
