கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கைக்காக சுற்றுச் சுழல் அறிக்கை பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இரண்டாம் கட்டம் தொடர்பில் அறிக்கை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் நீதிமன்றத்திடம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த திட்டத்தை கைவிடுமாறு சுற்றுச் சுழல் ஆய்வாளர் மையம் தாக்கல் செய்த மனுமீதான விசாரணை நேற்று இடம்பெற்ற நிலையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.
