Friday, 5 June 2015

வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள் நூல் வெளியீட்டு விழா

(அஸ்ரப் ஏ சமத்)

Displaying book cover final OK.jpg

சுகைப் .எம். காசீம் எழுதிய
வடபுல முஸ்லிம்களின்
மீள்குடியேற்ற சவால்கள்

  -

நூல் வெளியீட்டு விழா ஜூன் 6 கொழும்பில்

தினகரன் வாரமஞ்சரி இணை ஆசிரியர் சுஐப் எம். காசிம் எழுதிய ~வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள்| நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் ஜூன் மாதம் 6ம் திகதி சனிக்கிழமை (06.06.2015) மாலை 4.00 மணிக்கு கொழும்பு 10ää டி. ஆர். விஜயவர்தன மாவத்தையில் அமைந்துள்ள தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெறும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் ராஜித சேனாரட்ன பங்கேற்கின்றார். விசே;ட விருந்தினர்களாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்ää தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன்ää ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் எம்.பி. ஆகியோர் பங்கேற்கின்றனர்.
ஜனாதிபதி சட்டத்தரணியும் இலங்கை தொலைத்தொடர்பு ஆணைக் குழுவின் பணிப்பாளர் நாயகமுமான எம். எம். ஸ_ஹைர்ää இலங்கைத் தரக்கட்டளை நிறுவனத்தின் தலைவரும் கொழும்பு பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞான பீட சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி எம். எஸ். அனீஸ் ஆகியோர் இவ்விழாவில் சிறப்புரையாற்றுவர். ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என். எம். அமீனின் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தினகரன் வாரமஞ்சரி பிரதம ஆசிரியர் தே. செந்தில் வேலவர்ää தினகரன் நாளிதழ் பதில் ஆசிரியர் க. குணராசாää வீரகேசரி நாளிதழ் பிரதம ஆசிரியர் ஸ்ரீகஜன்ää தினக்குரல் வார இதழ் பிரதம ஆசிரியர் பாரதி இராஜநாயகம்ää ரூபவாஹினி கூட்டுத்தாபன தமிழ்ப் பிரிவு பிரதிப் பணிப்பாளர் ய10. எல். யாகூப்ää சுடர்ஒளி பிரதம ஆசிரியர் என். பத்மசீலன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

புரவலர் ஹாசிம் உமர் முன்னிலையில் நடைபெறும் இவ்விழாவில் நூலின் முதல் பிரதியை முசலிப் பிரதேச சபைத் தலைவர் தேசமானிய டபிள்ய10. எம். எஹ்யான் பெற்றுக் கொள்கிறார்.

நூலின் முதன்மைப் பிரதிகளை தேசமான்ய அல்ஹாஜ் ஏ. பி. அப்துல் கைய10ம்ää தேசமான்ய மனித நேயன் இர்ஷாத் ஏ. காதர்ää தொழில் அதிபர் ஸப்ரிää புரவலர் பாயிக் மக்கீன்ää பொன்மனச் செல்வி கௌசலாதேவி. கவிஞர் டாக்டர் தாஸிம் அஹமட் ஆகியோர் பெற்றுக் கொள்கின்றனர்.
வரவேற்புரையை சமூக ஜோதி ரபீக்கும்ää நூலாசிரியர் அறிமுகத்தை கலைஞர் கலைச் செல்வனும்ää பாராட்டுரையை சிரேஷ்ட ஊடகவியலாளர் எம். ஏ. நிலாமும்ää கருத்துரையை ஊடகவியலாளர் ஏ. ஜி. எம். தௌபீக்கும் நிகழ்த்துகின்றனர். சிரேஷ்ட ஒலிப்பாளரும் சட்டத்தரணியுமான இஸ்மாயில் பி. மஆரீப் நிகழ்ச்சிகளை வழங்குகிறார்
Loading...