துனீசியாவில், சுற்றுலா மையங்கள் மீது இஸ்லாமியவாத தீவரவாதிகள் மேலும் தாக்குதல்களை மேற்கொள்ளலாம் என பிரிட்டன் எச்சரித்துள்ளது.
சமூக வலைதளங்கள் மூலமாக தீவிரவாதக் குழுக்களால் ஈர்க்கப்பட்ட தனிநபர்கள் மூலம், தாக்குதல்கள் மேற்கொள்ளப்படக் கூடும் என பிரித்தானிய வெளிவிவகாரச் செயலகம் தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை, துனீசியாவின் சூஸில் உள்ள கடற்கரையில் தனியாக வந்த துப்பாக்கிதாரி ஒருவர், துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பலியான 38 பேரில், குறைந்தது 15 பேர் பிரித்தானியப் பிரஜைகளாவர்.
நேற்று சனிக்கிழமை இரவு, இந்தத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து நூற்றுக்கணக்கானவர்கள் ஊர்வலம் சென்றனர்.
