ஆப்பிரிக்காவிலிருந்தும் மத்திய கிழக்கிலிருந்தும் ஐரோப்பாவுக்கு பெருமளவில் மக்கள் குடிபெயர்ந்துவரும் சூழ்நிலையால் வெளிநாட்டவர்கள் மீதான நியாயமற்ற வெறுப்புணர்வு-அச்சம்(xenophobia) அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக ஐநாவின் குடியேறிகள் தொடர்பான பிரதிநிதி பீட்டர் சதர்லேண்ட் கூறுகின்றார்.
பெரும்பாலான குடியேறிகள், பெரும்பாலும் சிரியாவிலிருந்தும் எரித்திரியாவிலிருந்தும் வெளியேறுகின்றவர்கள் துன்புறுத்தல்களிலிருந்து தப்பிவருபவர்கள் என்று சதர்லேண்ட் பிபிசியிடம் தெரிவித்தார்.
குடியேறிகள் இறுதியாக சென்றுசேருகின்ற ஐரோப்பிய நாடுகளிடம் தஞ்சம் பெறுவதற்கு அவர்கள் உரித்துடையவர்கள் என்றும் அவர் கூறினார்.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளால் தஞ்சம் அளிக்கப்படும் குடியேறிகளின் எண்ணிக்கை தொடர்பில் கோட்டா நடைமுறை அவசியம் என்றும் ஐநா பிரதிநிதி தெரிவித்தார்.
