Monday, 15 June 2015

நியுசிலாந்து அணி 3 விக்கட்டுகளால் வெற்றி

சுற்றுலா நியுசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் சதம்டன் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற ஒருநாள் போட்டியில் நியுசிலாந்து அணி 3 விக்கட்டுகளால் வெற்றிபெற்றது. 

நாணய சுழற்சியில் வெற்றிபெற்று இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. 

இதன்படி, அந்த அணி 45.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுகளை இழந்து 302 ஓட்டங்களை பெற்றது.

பதிலளித்தாடிய நியுசிலாந்து அணி 49 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுகளை இழந்து 306 ஓட்டங்களை பெற்று வெற்றிபெற்றது.

போட்டியின் சிறப்பாட்டக் காரராக நியுசிலாந்து அணி சார்பாக 118 ஓட்டங்களை பெற்ற கேன் வில்லியம்சன் தெரிவு செய்யப்பட்டார்.

இதனிடையே, சுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான 2 வது டெஸ்ட் ஆட்டத்தில் அவுஸ்திரேலிய அணி 277 ஓட்டங்களால் வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.
Loading...