Saturday, 13 June 2015

சிறப்பாகச் செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் தரவரிசை பட்டியல்

Image result for sri lanka parliament
இலங்கை பாராளுமன்றில் சிறப்பாகச் செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது.
தி நேசன் ஆங்கிலபத்திரிகை  வெளியிட்டுள்ள தரப்படுத்தல்படி பாராளுமன்றில் துடிப்பாக சிறந்து செயற்படும் உறுப்பினர்களில் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவிற்கு முதலிடம் கிடைத்துள்ளது.
தரவரிசையில் இரண்டாம் இடத்தை மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவும் மூன்றாம் இடத்தை அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவும் பெற்றுள்ளனர்.
நான்காவது இடத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்கவும் சஜித் பிரேமதாஸ 5ஆம் இடத்திலும்
புத்திக பத்திரண 6ஆம் இடத்திலும்
அஜித் பி.பெரேரா 7ஆம் இடத்திலும்
சுஜீவ சேனசிங்க 8ஆம் இடத்திலும்
சுனில் ஹந்துனெத்தி 9ஆம் இடத்திலும்
10ஆவது இடத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவும் உள்ளனர்.
தமிழ்- முஸ்லிம் கட்சி தலைவர்கள் என்ற அடிப்படையில் நோக்கும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் 40ஆவது இடத்திலும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 84ஆவது இடத்திலும் உள்ளனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் 55ஆவது இடத்திலும் தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம்.அத்தாவுல்லா 54ஆவது இடத்திலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாத் பதியூதின் 68ஆவது இடத்திலும் உள்ளனர்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் முத்து சிவலிங்கம் 166ஆவது இடத்திலும் மலையக மக்கள் முன்னணியின் அரசியல்துறை தலைவர் வீ.இராதாகிருஸ்ணன் 133ஆவது இடத்திலும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் 205ஆவது இடத்திலும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவர் பிரபா கணேசன் 168ஆவது பிரஜைகள் முன்னணி செயலாளர் நாயகம் ஸ்ரீரங்கா 57ஆவது இடத்திலும் உள்ளனர்.
ஏனைய தமிழ்- முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் அவர்கள் பிடித்துள்ள இடங்களும் வருமாறு.
ஏ.எச்.எம்.அஸ்வர் – 16ஆவது இடம்
எம்.ஏ.சுமந்திரன் – 31ஆவது இடம்
எஸ்.சிறிதரன் – 33ஆவது இடம்
சந்திரகுமார் முருகேசு – 39ஆவது இடம்
பாக்கியசெல்வம் அரியனேத்திரன் – 44ஆவது இடம்
ஆர்.யோகராஜன் – 47ஆவது இடம்
ஹுனைஸ் பாருக் – 87ஆவது இடம்
பொன்னம்பலம் செல்வராசா – 92ஆவது இடம்
டி.எம்.சுவாமிநாதன் – 93ஆவது இடம்
மொஹமட் ஹிஸ்புல்லாஹ் – 94ஆவது இடம்
எஸ்.யோகேஸ்வரன் – 103ஆவது இடம்
சுரேஸ் பிரேமச்சந்திரன் – 104ஆவது இடம்
விநாயகமூர்த்தி முரளிதரன் – 106ஆவது இடம்
செல்வம் அடைக்கலநாதன் – 120ஆவது இடம்
ஈ.சரவணபவன் – 123ஆவது இடம்
சிவசக்தி அனந்தன் – 128ஆவது இடம்
அப்பாத்துரை விநாயகமூர்த்தி – 137ஆவது இடம்
சில்வஸ்திரி எலன்டின் – 138ஆவது இடம்
மாவை சேனாதிராஜா – 139ஆவது இடம்
பி.ராஜதுரை – 147ஆவது இடம்
ஹசன் அலி – 171ஆவது இடம்
அப்துல் காதர் – 172ஆவது இடம்
விஜயகலா மகேஸ்வரன் – 179ஆவது இடம்
எம்.எஸ்.தவுபிக் – 191ஆவது இடம்
எம்.எம்.ஹாரிஸ் – 192ஆவது இடம்
ஏ.எச்.எம்.பௌசி – 197ஆவது இடம்
எச்.எம்.ஹலீம் – 198ஆவது இடம்
வினோ நோகராதலிங்கம் – 200ஆவது இடம்
பைசர் முஸ்தபா – 203ஆவது இடம்
பசீர் சேகுதாவூத் – 206ஆவது இடம்
பைசல் காசிம் – 216ஆவது இடம்
ஆறுமுகன் தொண்டமான் – 218ஆவது இடம்
தரப்படுத்தல்படி இறுதி 225ஆவது இடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து ஆளும் கட்சிக்குத் தாவிய பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...
  • தென் கொரியா முன்னாள் ஜனாதிபதிக்கு 15 ஆண்டுகள் சிறை05.10.2018 - Comments Disabled
  • தொகுதி ரீதியான தேர்தல் முடிவுகள் நாளை நள்ளிரவு முதல் வெளியாகும்16.08.2015 - Comments Disabled
  • Minister Kiriella Must Know A Thing Or Two03.03.2016 - Comments Disabled
  • Two 6.8-Magnitude Earthquakes Strike Off Solomon Islands23.05.2015 - Comments Disabled
  • ரவி ஜயவர்தன ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபை  தலைவராக நியமிக்கப்பட உள்ளார்01.08.2015 - Comments Disabled