Friday, 19 June 2015

நாட்டு நிர்வாகத்தை விட, மகிந்தவை சமாளிக்க மைத்திரிக்கு அதிக நேரம் செல்கிறது

நாட்டின் நிர்வாகத்தில் கவனம் செலுத்துவதைவிட, மகிந்த தரப்பினரை சமாதானப்படுத்துவதிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிக நேரத்தை செலவிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சர்வதேச ஊடகம் ஒன்று இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
 
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதில் இருந்து மகிந்த தரப்பினரால் சிறிலங்கா சுதந்திர கட்சியில் குழப்பங்கள் விளைவிக்கப்பட்டு வருகின்றன.
 
இதனை தீர்ப்பதிலேயே அதிக நேரம் ஜனாதிபதிக்கு செலவாகிறது.
 
இந்த நிலையில் மகிந்தராஜபக்ஷவுடன் சமாதான செயற்பாட்டை மேற்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளதாகவும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
 
எவ்வாறாயினும், நாடாளுமன்றத்தை உடனடியாக கலைப்பதன் ஊடாக, மகிந்தராஜபக்ஷ ஏதேனும் தீர்மானம் மேற்கொள்ள அழுத்தம் கொடுக்க முடியும்.
 
இதன் மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வை காண முடியம் என்றும் என்றும் அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
Loading...