மகிந்த ராஜபக்ஷவை பிரதம வேட்பாளராக நியமிக்க வலியுறுத்தி மக்கள் போராட்டங்களை ஒழுங்கு செய்யும் நடவடிக்கைகள்ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கம்பஹா மாவட்டத்தில் இதற்கான ஒழுங்கு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இது தொடர்பில் மகிந்தவுக்கு ஆதரவான தரப்பினர் பல்வேறு துண்டுபிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
மகிந்தராஜபக்ஷவுக்கு சிறிலங்கா சுதந்திர கட்சியில் வேட்புரிமை வழங்கப்படாது என்று அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக கூறி இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையிலேயே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
