Saturday, 13 June 2015

யானைக் கழிவிலிருந்து தயாரிக்கப்படும் காப்பி


யானைக் கழிவிலிருந்து தயாரிக்கப்படும் காப்பி-  விலை ரிம 49
சீயாங் சின் ஜுன் 12- நாட்டில் அங்காங்கே காப்பி கடைகள் நிரம்பி வழிகிறது. ஸ்டார் பாக்ஸ் போன்ற உலகப் புகழ்ப் பெற்ற நிறுவனங்கள் தங்களின் காப்பியை உலகலவிய நிலையில் பிரபலபடுத்தி வருகின்றனர்.காப்பி அதன் சுவைக்காக மட்டுமில்லாது அதன் பிரபலத்துக்காகவும் குடித்து வருகின்றனர் இன்னும் ஒரு சிலர். ஒரு காப்பி குடிப்பதற்கு பதிலாக ஒரு வேளை சாப்பாட்டேயே நாம் சாப்பிட்டு விடலாம்.
ஆனால், ஸ்டார் பாக்ஸ் போன்ற காப்பிகளின் விலையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு வந்துள்ளது சந்தையில் இப்போது விற்பனையாகும் யானைக் கழிவிலிருந்து தயாரிக்கப்படும் காப்பி.இதன் விலை மட்டும் 49 வெள்ளியாம்.
பிளாக் ஐவரி என்ற இந்த காப்பியை தாய்லாந்தின் சியாங் ராய் எனும் இடத்தில் தயாரித்து வருகின்றனர்.
இதற்கு முன் பூனையின் கழிவிலிருந்து தயாரிக்கப்பட்ட காப்பி லுவாக் என்ற காப்பி ஆசியா நாடுகளில் பிரபலமான காப்பியாக விளங்கியது போல் தற்போது இந்த காப்பியும் சுற்றுப்பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.
இந்த இடத்தில்  இக்காப்பியை தயாரிப்பதற்காக தனியாக யானைகள் வளர்க்கப்படுகின்றன. அவற்றுக்கு புல், வாழைப்பழம், கரும்பு ஆகியவற்றுடன் காப்பி கொட்டைகளையும் உண்ணக் கொடுக்கின்றனர்.அந்த காப்பி கொட்டைகள் யானையின் வயிற்றில் 17மணி நேரம் வரை ஜீரணமாகிறது. 

பின்னர், யானை கழிவில் செரிக்காமல் வெளியேறியிருக்கும் காப்பி கொட்டைகள் சேகரிக்கப்படுகின்றன. 33 கிலோ கொட்டைகளை யானை உண்டால் ஒரு கிலோ காப்பி கொட்டை மட்டுமே கிடைக்குமாம்.
இவ்வளவு குறைவாக காப்பி கொட்டைகள் கிடைப்பதால் தான் அதன் விலை இவ்வளவு அதிகமாகிறது. இந்த கொட்டைகளை வறுத்து, அரைத்து தயாராவது தான் பிளாக் ஐவரி காப்பி.தற்போது  இந்த காப்பி  தாய்லாந்தில் உள்ள குறிப்பிட்ட சொகுசு ஒட்டல்களில் கிடைக்கிறது. 


இந்த பிளாக் ஐவரி காப்பியை தாய்லாந்து கோல்டன் டிரையாங்கிள் நிறுவனம் தயாரிக்கிறது. கனடாவை சேர்ந்த இதன் நிறுவனர் பிளேக் டின்கின் கூறுகையில் மக்களுக்கு வித்தியாசமான வகையில் காப்பியை வழங்கும் முயற்சியில் பல ஆண்டுகளாக போராடி வந்ததாகவும் பின்னர் இந்தக் கண்டுப்பிடிப்பை தாம் செய்ததாகவும் தெரிவித்தார்.முதலில் தாம் பூனை கழிவுகளிலிருந்து காப்பியை தயார் செய்து குடித்ததாகவும் அதன்  சுவை திருப்தி அளிக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அதன் பின்னரே, யானைகள் கழிவுகளிலிருந்து காப்பி கொட்டைகளை பிரித்தேடுக்கும் முயற்சியை மேற்கொண்டதாக தெரிவித்தார் பிளேக் டின்கின்.

இதனிடையே, இந்த கழிவை  சேகரித்து அவற்றிலிருந்து காப்பி கொட்டைகளை மட்டும் தனியாக பிரிப்பதற்கு தனியாக குழு ஒன்று இங்கு உள்ளதாம்.அந்தக் குழுவினர் அவற்றை தனியாக பிரித்து வெயிலில் போட்டுக் காய வைத்து காப்பிக்கு தயார் செய்கின்றனர்.அதன் பின்னர், 19-ஆம் நூற்றாண்டின் பயன்படுத்தப்பட்ட பிரான்ஸ் நாட்டின் காப்பி இயந்திரத்தின் மூலம் இந்த காப்பி தயாரிக்கப்படுகிறது.
ஓட்டலுக்கு வரும் பெரும்பாலான மக்களின் முதல் ஆர்டராக இந்த காப்பி அமைந்துள்ளது.இது குறித்து பேசிய ஜெர்மன் சுற்றுப்பயணி பர்பாரா இந்தக் காப்பி மாறுப்பட்ட சுவையைக் கொடுப்பதாக கூறினார்.இது போன்ற காப்பிகள் ருசியில் மட்டும் சிறந்து விளங்குவது மட்டுமில்லாது விலையிலும் சற்றே அதிகமாக உள்ளது.இருப்பினும் அதன் சுவைக்காக சுற்றுப்பயனிகள் இது போன்ற காப்பிகளைச் சுவைத்து வருகின்றனர்.
 
Loading...