வாஷிங்டன் ஜுன் 13 – டுவிட்டரில் விரைவில் 140-க்கும் மேற்பட்ட எழுத்துக்களை பயன்படுத்த முடியும் என செய்திகள் வெளியாகியுள்ளது.
டுவிட்டரின் வடிவமைப்பாளர் சச்சின் அகர்வால் தெரிவித்துள்ள தகவலின் படி அடுத்த மாதம் முதல் நேரடியாக செய்தி அனுப்பும் பகுதியில் 140 எழுத்துக்கள் என்ற கட்டுப்பாட்டை நீக்க முடிவு செய்திருப்பதாக தெரிவித்தார். நேரடியாக செய்தி அனுப்பும் பகுதி என்பது தனிப்பட்ட ஒருவருக்கு செய்தி அனுப்ப பயன்ப்படுத்தப்படுகிறது. செய்தியை அந்த ஒருவர் மட்டுமே பார்க்க முடியும்.
மற்றப்படி ஒரு டுவிட்டுக்கு 140 என்ற கட்டுப்பாடு தொடர்ந்து அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற சமூக வலைதளங்களில் இது போன்ற கட்டுப்பாடுகள் இல்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
