Saturday, 20 June 2015

ஆப்ரிக்க யானைகள் அதிகம் கொல்லப்படும் இடங்கள் அடையாளம் காணப்பட்டன

ஆப்ரிக்க யானைகள் அழிவின் விளிம்புக்கு செல்வதாக அச்சம்
ஆப்ரிக்க யானைகள் அழிவின் விளிம்புக்கு செல்வதாக அச்சம்
ஆப்ரிக்க யானைகள் அவற்றின் மதிப்பு மிக்க தந்தங்களுக்காக சட்டவிரோதமாக அதிகமாக வேட்டையாடப்படும் இடங்களாக ஆப்ரிக்காவின் இரண்டு இடங்களை தாங்கள் அடையாளம் கண்டிருப்பதாக ஆய்வாளர்கள் அறிவித்திருக்கிறார்கள்.
தான்சானியா மற்றும் மொசாம்பிக் ஆகிய இருநாடுகளில் தான் ஆப்ரிக்க யானைகள் அதிகம் வேட்டையாடப்பட்டிருக்கின்றன என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மரபணுச்சோதனை முறைகளை பயன்படுத்தி விஞ்ஞானிகள் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள். சட்டவிரோதமான முறையில் கடத்தப்படும்போது பிடிபட்ட யானைத்தந்தங்களின் மரபணுக்களை யானைகளின் சாணத்தில் இருக்கும் மரபணுக்களோடு ஒப்பிட்டு பார்த்ததில் இந்த யானைத்தந்தங்கள் எங்கிருந்து வருகின்றன என்பதை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுபிடித்து, அதன் அடிப்படையில் தந்தங்களுக்காக யானைகள் அதிக அளவு வேட்டையாடப்படும் இடங்களை இந்த ஆய்வாளர்கள் அறுதியிட்டிருகிறார்கள்.
சட்டவிரோத வேட்டைகள் மூலம் ஆப்ரிக்க யானைகள் அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 2013 ஆம் ஆண்டு மட்டும் 50,000த்துக்கும் அதிகமான யானைகள் வேட்டையாடப்பட்டிருக்கின்றன.
null
தந்தங்களுக்காக ஒட்டுமொத்த யானைகளே அழிவின் விளிம்பில் இருப்பதாக எச்சரிக்கை
விஞ்ஞானிகளின் இந்த புதிய புள்ளிவிவரங்கள் சயன்ஸ் சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளன.
யானைகள் அவற்றின் மதிப்பு மிக்க தந்தங்களுக்காக வேட்டையாடப்படும் போக்கை தடுப்பதற்கான சர்வதேச முயற்சிகளை வலுப்படுத்த தாங்கள் வெளியிட்டிருக்கும் இந்த புதிய புள்ளிவிவரங்கள் பயன்படும் என்று இந்த விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளிப்படுத்தியுள்
Loading...