இஸ்லாமிய அரசில் வெளிநாட்டு தீவிரவாதிகள் இணைவது அதிகரிப்பதாகவும், இராக்குக்கு போதுமான உதவிகளைச் செய்ய உலகம் தவறி விட்டது என்றும் இராக்கிய பிரதமர் ஹைதர் அல் அபாடி கூறியுள்ளார்.
இஸ்லாமிய அரசை கட்டுப்படுத்துவது குறித்து, பாரிஸில், 20 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பில் அவர் பேசினார்.
அதேவேளை மோதல் களங்களில், பன்னிரண்டு வயதேயான சிறார்களை இஸ்லாமிய அரசு பயன்படுத்துவது குறித்த பிபிசியின் சிறப்பு தகவல்களை பார்க்கலாம்.
மூளைச்சலவை செய்யப்பட்ட அவர்களுக்கு, இராணுவ பாணியிலான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
போட்டிக்குழுக்களுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுபவர்கள் சித்ரவதை செய்யப்படுவதுடன், சில நேரங்களில் கொல்லவும்படுகிறார்கள்.