Saturday, 27 June 2015

சாய்ந்தமருது பிரதேச சபை - மாகாண சபையினால் வழங்கப் பட்ட கடிதம் பேய்க் காட்டலா ?

மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் அவர்கள் மாகாண சபையினால் வழங்கப் பட்டதென்று ஒரு கடிதத்தை சாய்ந்தமருது ஜும்மா பள்ளி வாசல் நிர்வாகிகளிடம் காண்பித்து சாய்ந்தமருது பிரதேச சபை க்கான ஒப்புதல் கொடுக்கப் பட்டுள்ளது என்று காண்பித்தார் , தற்போது ரவுப் ஹக்கீம் கொடுத்த அறிக்கைப் படி அதுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை என்ற தோற்றப் பாடே தெரிகின்றது ,இதன் படி மாகாண சபை கடிதத்தைக் காண்பித்து  சாய்ந்தமருது ஜும்மா பள்ளி வாசல் நிர்வாக சபை ஏமாற்றப் பட்டுள்ளது . 

அது மட்டும் அல்ல ஹகீம் அவர்கள் எல்லை நிர்ணயம் பிரச்சினை பற்றி ஏன் சாய்ந்தமருது ஜும்மா பள்ளி வாசல் நிர்வாகிகளிடம் நேரகாலத்தோடு கூறாமல் அவர்களை அலைக்களைத்தது ஏன் ?  

இதோ:   

சாய்ந்தமருது பிரதேச சபை பற்றி ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி  யெழுப்பினார்.

அதற்குப் பதிளித்த அமைச்சர் ஹக்கீம்,சாய்ந்தமருது பிரதேச சபையைப் பொறுத்தவரை,நாட்டிலுள்ள உள்ளுராட்சி சபைகளின் எல்லைகளை மீள் நிர்ணயம் செய்கின்ற குழுவின் அறிக்கை உரிய அமைச்சரினால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. 

அதை வர்த்தமானியில் பிரசுரித்த பின்னர் தான் மீண்டும் எல்லைகளை மீள்நிர்ணயம் செய்யும் விஷயத்தில் நடவடிக்கை எடுக்க முடியும் என்பதை பொது நிர்வாக   உள் நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் தடல்லகே அதிலுள்ள நியாயங்களை எங்களுக்கு சொல்லியிருக்கிறார். அவ்வாறன வர்த்தமானி அறிவித்தலின் பின்னர் தான் சம்பந்தப்பட்ட அமைச்சு நடவடிக்கை எடுக்கும். 

சாய்ந்தமருது பிரதேச சபை கோரிக்கை பற்றி   தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி பல தடவை சொல்லி உள்ளது சாய்ந்தமருது பிரதேச சபை கிடைக்க மாட்டாது  என்று 

எதிர்வரும் தேர்தலில் மக்கள் மீண்டும் முஸ்லிம் காங்கிரசின் வார்ததைகளை நம்பி  சோரம் போகாமல் மிக எச்சரிக்கையுடன் இருக்கும் படி தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் பாவா உங்களைக் கேட்டுக் கொள்கிறார்


          தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் பாவா
Loading...
  • நிமால் சிறிபால டி சில்வாவிற்க்கு பிரதிப் பிரதமர் பதவி வழங்கப்படவுள்ளது19.08.2015 - Comments Disabled
  • US Draft Resolution: What The Ranil–Sirisena Govt Will Not Tell you!25.09.2015 - Comments Disabled
  • அரசியல் தீர்வை மையப்படுத்தியே புதிய அரசமைப்பு24.12.2015 - Comments Disabled
  • முஸ்லிம்களுக்கு  அரசியல் ரீதியில் தலைமைத்துவம் தேவை இல்லை 11.04.2016 - Comments Disabled
  • சந்திரிகா ஐ.தே.கட்சியின் பேச்சாளராக மாறியுள்ளார் : ஜனக பண்டார தென்னகோன்09.08.2015 - Comments Disabled