கருவளத்தை இழந்த பெண்களுக்கு நம்பிக்கை தரும் விஞ்ஞானம்
13 வயதுச் சிறுமியின் கருவகங்களில் (சூலகம்) ஒன்றை அகற்றிய விஞ்ஞானிகள், அதன் திசுக்களை உறைநிலையில் சேமித்துவைத்திருந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீளப் பொருத்தியிருக்கிறார்கள். அதன் மூலம் ஆரோக்கியமான ஆண்குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
நோய்களால் பாதிக்கப்பட்டு, கருவளத்தை இழந்துள்ள ஆயிரக் கணக்கான பெண்களுக்கு இந்த தொழில்நுட்பம் மூலம் பலன் கிடைக்கும் என்று மருத்துவர்கள் நம்புகின்றனர்.