புலம் பெயர்ந்த மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கிலேயே, அரசாங்கம் உலக தமிழர் பேரவையுடன் பேச்சுவார்த்தையை நடத்தவிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனைக் கூறியுள்ளார்.
தமிழீழ மக்களும், தமிழக மக்களும் மற்றும் புலம்பெயர்ந்த மக்களும் ஒரே நோக்கத்தில் செயற்பட்டால் விரைந்து அரசியல் தீர்வு ஒன்றை பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்பு இருக்கிறது.பதிவு இணைய செய்தி
ஆனால் இதனை முறியடிப்பதற்கான சூழ்ச்சியாகவே தற்போதைய பேச்சுவார்த்தைகள் அமைகின்றன.
புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடையே பிளவை ஏற்படுத்து, தங்களுக்கு சாதகமான சூழ்நிலை ஒன்றை ஒருவாக்கிக் கொள்ள அரசாங்கம் முயற்சிக்கிறது.
