
முஸ்லிம் சமூகத்தால் சாணக்கியத் தலைவர் என்று புகழப் படும் அமைச்சர் ரவுப் ஹக்கீம் சாய்ந்தமருது பிரதேச சபை கோரிக்கையில் எடுத்த முடிவு சாணக்கிய முடிவுதான் . மாநகர சபை வேண்டாம் என்று சில நேற்று முளைத்த அரசியல் வாதிகளின் தூர நோக்கு அற்ற சில சுய நல அரசியல் வாதி களின் நடவடிக்கைகளுக்கு அவரால் அடிக்கபட்ட சாவு மணி என்றே கூற வேண்டும்.
சாய்ந்தமருது பிரதேச சபைக் கோரிக்கையானது அவ்வூர் மக்களின் ஒட்டு மொத்தக் கோரிக்கை அல்ல என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். சில சில்லறை அரசியல் வாதிகள் ஊரையே பலிக் கடாவாக்கும் சூழலை திட்ட மிட்டு உருவாக்குகின்றனர்.
அமைச்சர் ஹக்கீமின் இத் தீர்மானத்துக்கு தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி தமது பாராட்டை அமைச்சர் ரவுப் ஹக்கீம் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறது
