Sunday, 7 June 2015

எனது மனைவியின் வங்கி கணக்கில் ஒரு சதம் கூட இல்லை ; முன்னாள் ஜனாதிபதி

news

எனது மனைவி சிரந்தியின் சிரிலிய சவிய வங்கிக் கணக்கில் அரச பணம் ஒரு சதம் கூட இல்லை என முன்னாள் ஜனாதிபதி  மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.    கொழும்பு - நாரஹேன்பிட்டிய அபயராம விகாரையில் நேற்று இடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.    அவர் மேலும் தெரிவிக்கையில்,    ஷிரந்தியின் சிரிலிய சவிய வங்கிக் கணக்கில் அரச பணம் ஒரு சதம் கூட இல்லை .அவ்வாறு இருக்குமென்றால் அதனை அரசிடன்தான் நீங்கள் கேட்க வேண்டும்.    இந்த அபயராம விகாரயை நான் தேர்தல் அலுவலகமாகப் பயன்படுத்துவதாக சிலர் விமர்சனம் செய்கின்றனர். தூய்மையான இந்த விகாரையை நான் அவ்வாறு பயபடுத்தமாட்டேன்.   அபயராம விகாரை நான் மனதார வழிபடும் விகாரை எனவும் அவர் மேலும்  தெரிவித்துள்ளார்.   இதேவேளை , ஆட்சி மாற்றத்தினையடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தவுடன், மகிந்தவின் ஆட்சிக் காலத்தில் நடந்த ஊழல்கள் தொடர்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.   அந்தவகையில் மகிந்தவின் சகோதரர் பசில் ராஜபக்‌ச பல இலட்சம் நிதி மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.  மற்றொரு சகோதரரான கோத்தாபய, ஊழல் தடுப்பு ஆணைக்குழுவின் விசாரணையின் கீழ் உள்ளார்.    இந்தநிலையில், மகிந்தவின் மனைவி ஷிரந்தியின் பெயரில் இயங்கிவரும் சிரிலிய சவிய வங்கிக் கணக்குகள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.    அதன்படி சிரிலிய சவிய வங்கிக் கணக்கு தொடர்பில் சில தினங்களுக்கு முன்னர் ஷிரந்தியிடம் நிதி மோசடிப் பிரிவு வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. 








Thanks Uthayan - 
Loading...