Tuesday, 9 June 2015

தேசிய, சர்வதேச தேவைகளை இனங்கண்டு கல்விக் கொள்கைகள் விருத்தி செய்யப்பட வேண்டும்!

news
நாட்டின் கல்விக்கொள்கை தேசிய மற்றும் சர்வதேச தேவைகளை அடிப்படையாகக்கொண்டு தொடர்ந்தும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.    இதன்போது பாடசாலைகளில் தொழில்நுட்ப பாடங்களை கற்பிப்பதனை ஊக்குவிப்பது போன்று இனங்களுக்கிடையே நல்லுறவினை விருத்தி செய்ய தேவையான தொடர்புசாதன திறமைகளை விருத்தி செய்யூம் நோக்குடன் மொழிப் பாடங்களை கற்பிப்பது விருத்தி செய்ய வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 

  இன்று காலை ஜனாதிபதி அலுவலகத்தில் தேசிய கல்வி ஆணைக்குழு சபையின் உத்தியோகத்தர்களை சந்தித்தபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.    மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,    சிங்கள மாணவர்களுக்கு தமிழ் மொழியும் தமிழ் மாணவர்களுக்கு சிங்கள மொழியும் கற்பிப்பதில் தற்போதைய நிலைமையைவிட மேலும் பலமான வேலைத்திட்டங்களை அமுல்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.-என்றார்.    இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளார் பி.பீ.அபேகோன், தேசிய கல்வி ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் லக்ஸ்மன் ஜயதிலக்க உட்பட ஆணைக்குழுவின் சபை உத்தியோகத்தர்கள் பங்கேற்றனர். 
Loading...