ஒரு நோயாளியின் நாடித் துடிப்பை பிடித்து அறிவது போல ஒரு பொருளாதாரத்தின் ஆரோக்கியத்தினை அறிவதற்கு, அந்த நாட்டில் நிலவும் பொருட்களின் விலை, வட்டி வீதங்கள், பங்குச் சந்தை, வெளி நாட்டு வர்த்தகம், வெளி நாட்டு நாணயம் மற்றும் இதர உள் நாட்டு, வெளி நாட்டு பொருளாதார அரசியல் மாற்றங்கள் போன்றவற்றை தொகுத்து ஆராய வேண்டும்.
சென்ற மார்ச் மாதம் வரையிலான இலங்கைப் பொருளாதாரத்தின் ஒட்டு மொத்த நிலையினை தொகுத்து நோக்குகின்ற போது, அது ஆராயப்பட்ட எல்லா அளவீடுகளிலும் ஓர் பாதக நிலையினையே சமிஞ்யை செய்துள்ளன. ஒரு புறம், பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பு நிலமைகளில் திருப்தியான ஓர் நிலையினை நோக்கி நகரும் அதேவேளை மறுபுறம், பொருளாதார உறுதி, வருமானப் பரம்பல் மற்றும் வாழ்க்கைச் செலவீனம் தொடர்பாக பாதக நிலைகளே கடந்த சில மாதங்களாக அவதானிக்கப்பட்டுள்ளன.
இதற்கு, சர்வதேச வர்த்தக்கத்தில் காணப்படும் தேக்க நிலையே காரணம் என அரசு கூறி வருகின்ற நிலையில் இவை, முன்னர் கூறிய பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பினை பாதிக்க வல்லதாகும். எனினும், அண்மையில் ஐ.எம்.எப் கடன் வழங்க முன் வந்தமை மற்றும் இறக்குமதிக் கட்டுப்பாடுகள் என்பவற்றுடன் உள்நாட்டில் பேணத் தூண்டப்பட்டுள்ள செலவுச் சிக்கன நிலமைகள், எதிர் வரும் மாதங்களில் பாதகம் என்ற நிலையில் இருந்து ஓர் சிறிய முன்னேற்றத்தினை கொண்டு வரும் என எதிர் பார்க்கலாம்.
M.Mohideen Bawa -NDPHR
