Thursday, 25 June 2015

பொய் “UNP” காத்தான்குடி அமைப்பாளர்

காத்தான்குடியில் எச்.எம்.எம்.முஸ்தபா என்பவர் ஐக்கிய தேசியக் கட்சியின் காத்தான்குடி அமைப்பாளர் என பொய் கூறித்திரிகின்றார். அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் காத்தான்குடி அமைப்பாளரில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாசீம் தெரிவித்தார்.ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் இன்று (24.6.2015) புதன்கிழமை ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாசீமை சந்தித்தனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாசீமின் அழைப்பின் பேரில் ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஏ.சசிதரன் தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் அமைச்சர் கபீர் ஹாசீமை இவர்கள் சந்தித்தனர்.
இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்டத்திலுள்ள பிரதேச அமைப்பாளர்கள் நியமனம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.
இதன் போது ஐக்கிய தேசியக் கட்சியின் காத்தான்குடி அமைப்பாளர் என எச்.எம்.எம்.முஸ்தபா என்பவர் தான் ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர் என பொய் கூறி அரச அதிகாரிகள் மற்றும் சில அரசியல் வாதிகளையும் ஏமாற்றி வருவது குறித்தும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாசீமின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
இதன் போது கருத்து தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாசீம் காத்தான்குடியில் எச்.எம்.எம்.முஸ்தபா என்பவர் ஐக்கிய தேசியக் கட்சியின் காத்தான்குடி அமைப்பாளரோ அல்லது எனது இணைப்பாளரோ இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்.
இவர் தான் ஒரு அமைப்பாளர் என பொய் கூறி வருவதாகவும் அமைச்சர் கபீர் காசீம் கூறினார். கர்பலா பாலமுனை வீதி புனரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பாக இவரிடம் கேட்ட போது அந்த வீதி புனரமைப்பு குறித்து என்னிடம் பலரும் சுட்டிக்காட்டியதுடன் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு அதிகாரிகளும் எனது கவனத்திற்கு கொண்டு வந்தனர். அதனால் அந்த வீதியினை நிர்மானிப்பதற்கு பணம் ஒதுக்கினே;.
இந் நிலையில் எனக்கு தெரியாமல் எனது பிரத்தியேக செயலாளரிடம் மேற்படி முஸ்தபா என்பவர் வந்து தான் ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர் என பொய் கூறி அந்த வீதி நிர்மானம் முஸ்தபா என்பவரினால் இடம் பெறுவதாகவும் எனது பிரத்தியேக செயலாளரிடம் கையொப்பம் பெற்றுச் சென்றுள்ளார் எனவும் அமைச்சர் கபீர் ஹாசீம் குறிப்பிட்டார்.
முஸ்தபாவினால் ஊடகங்களுக்கு இந்த வீதி தொடர்பாக வெளியிடப்பட்ட கடிதத்தினை அமைச்சரிடம் இதன் போது காண்பித்தனர்.
இந்த கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளது நான் இல்லை எனவும் நான் இதற்கு கையொப்பமிட்டதாக முஸ்தபா ஊடங்களுக்கு பொய் கூறியுள்ளார் எனவும் அமைச்சர் கபீர் ஹாசீம் சுட்டிக்காட்டினார்.
மேற்படி முஸ்தபா என்பவர் எமது ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் இல்லை என்பதை நான் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரசாங்க அதிகாரிகள், மற்றும் அரசியல் பிரமுகர்கள் கட்சியின் தொண்டர்கள் காத்தான்குடியிலுள்ள பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன முக்கியஸ்தர்கள் அணைவருக்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன் எனவும் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் காத்தான்குடி அமைப்பாளர் என கடித தலைப்பினை அச்சிட்டு அதனை அவர் பயன் படுத்தி வந்தால் அவர் மீது கட்சி கடும் சட்ட நடவடிக்கை எடுக்கும் எனவும் அமைச்சர் கபீர் ஹாசீம் மேலும் குறிப்பிட்டார்.
இந்த சந்திப்பின் போது மட்டக்களப்பு அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஏ.சசிதரன், கல்குடா தொகுதி அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான எம்.மாசிலாமணி, லிங்கன், மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் காத்தான்குடி முகாமையாளர்களான வி.ரி.எம்.முபாறக் மற்றும் ஏ.அனீஸ் உட்பட அதன் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர் கால நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டன.
இந்த சந்திப்புக்கு மேற்படி காத்தான்குடி அமைப்பாளர் எச்.எம்.எம்.முஸ்தபா என்பவர் அழைக்கப்படவில்லை என்பது குறிப்படத்தக்கது.
unp
Loading...