Thursday, 25 June 2015

இணையத்தில் தனி மனித டி.என்.ஏ தகவல்கள் சேகரிக்கும் திட்டம்


வாஷிங்டன்: இணையத்தில் தனி மனித டி.என்.ஏ தகவல்களை சேகரிப்பதில் கூகுள் மற்றும் அமேசான் நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. 
டி.என்.ஏ எனப்படும் டிஆக்சி ரிபோ நியூக்ளிக் அமிலம், மனிதனின் ஒவ்வொரு செல்லிலும் காணப்படுகிறது. இதில் தனி மனிதனின் மரபு சார்ந்த விஷயங்கள் சேகரிக்கப்பட்டு இருக்கும்

தனி மனித டி.என்.ஏ தகவல்கள் சேகரிப்பு, புதிய மருந்துகள் பற்றிய ஆராய்ச்சிக்கு உதவியாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். 2018 ல் டி.என்.ஏ தகவல்கள் சேமிப்பு 100 கோடி டாலர் வணிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டி.என்.ஏ தகவல்கள் மூலம் குறிப்பிட்ட நபருக்கு தேவைப்படும் மருந்துகளை கண்டறிவதன் மூலம், நோயை விரைவில் குணப்படுத்த முடியும். அதிக அளவிலான வெவ்வேறு டி.என்.ஏ. தகவல்களைக் கொண்டு, குறிப்பிட்ட டி.என்.ஏ க்கு உரிய நபர்களில் சிகிச்சைக்கான பலன்கள் எவ்வாறு இருக்கின்றன என்பதையும் ஆராய முடியும்.

ஏற்கனவே, உலகில் வெவ்வேறு பல்கலைகளும், மருந்து கம்பெனிகளும் டி.என்.ஏ. தகவல்களின் அடிப்படையில் நோய்க்கான மருந்துகளை கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில், கூகுள் மற்றும் அமேசான் நிறுவனங்களின் டி.என்.ஏ. தகவல்கள் சேகரிப்பு மருத்துவ உலகிற்கு உதவியாக இருக்கும் என தெரிகிறது.
Loading...