Monday, 20 July 2015

தவிக்கும் உங்கள் தலை எழுத்தை மாற்ற மயில் சின்னம் இலக்கம் 1



இளம் சந்ததியினர் தமது உரிமைகளை கேட்டு நடுவீதியில் இறங்க வேண்டிய சூழ்நிலையை மாற்ற கூடிய நேரத்தை தற்போது இந்த காலம் உங்கள் கைகளில் தந்துள்ளது. பட்டதாரிகளாகியும் பல வருடங்கள் கடந்து தொழில் வாய்ப்புக்கள் இல்லது தவிக்கும் உங்களின் தலையேளுத்துக்களை மாற்ற கூடிய தேர்தலாக இதனை பயன் படுத்த வேண்டும் என திகாமடுல்ல அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (மயில் சின்னம்)இலக்கம் 1 வேட்பாளரும் கல்வியலாலருமான அன்வர் எம் முஸ்தபா மத்திய முகாமில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் ....

மக்களின் வாக்குகளை பெற்று பாராளுமன்ற கதிரைகளை சூடாக்கி கொண்டு இருந்து விட்டு இப்போதும் மக்களை மடையர்களாக்க வந்திருக்கும் இவர்களை பற்றி நீங்கள் நன்றாக சிந்திக்க வேண்டும். முஸ்லிம் மக்கள் கடந்த காலங்களில் பாரிய நெருக்கடிகளை சந்தித்த போது வாய்களுக்கு பாரிய பூட்டை போட்டிருந்த இவர்கள் எந்த முகத்துடன் மக்களிடம் வாக்கு கேட்க வருகிறார்கள் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.குறைந்தது ஒரு பத்திரிகை அறிக்கை கூட விட முடியாமல் இருந்த இவர்கள் மறைந்த தலைவரின் பாசறையில் பயின்றதாக தம்பட்டம் அடிக்கும் இவர்கள் மக்களுக்கு செய்தது தான் என்ன? 

கல்வியலாலர்களையும், மக்கள் பற்றிய சிந்தனை உள்ளவர்களையும் எமது தேசிய தலைமை அடையாளம் கண்டு உங்கள் முன்னாள் தந்துள்ளது. தலைவர் அஸ்ரப் விட்டு சென்ற இடத்திலிருந்து மக்கள் பணியை ஆரம்பித்திருக்கும் எமது தலைவர் ரிசாதின் கரங்களை பலப்படுத்த இம்முறை உங்களது சிந்தனையை விஸ்தரித்து எமது சின்னதிட்கு வாக்களிக்க கரம் கோருங்கள். இந்த ஜனாதிபதியையும் நல்லாட்சியையும் தொடர்ந்து முன்னெடுக்க நீங்கள் சிந்தித்து வாக்களிக்க கடமைபட்டுள்ளிர்கள்.

அந்த வகையில் சகலரும் வாக்களித்து எம்மை உங்கள் பிரதிநிதியாக அனுப்பினால் நமது பிரதேச அபிவிருத்தியை நாங்கள் முன்னெடுப்போம் என கூறினார். மேலும் பலரும் அங்கு உரையாற்றினர்

(நூர்)

Loading...