Monday, 20 July 2015

கோட்டை விடுவது ஏன்? ஏன் என்ற என் கேள்விக்குப் பதில் காண்பார்களா ?


அரசியவாதிகள் எவரும் வானத்தில் இருந்து குதித்து வந்து விடுவதில்லை. மக்கள் தேர்ந்து எடுக்காமல் இவர்கள் யாரும் பொறுப்புக்கு வர முடியாது. தலைவர்கள் பெரும்பான்மை மக்களின் எண்ணங்களை பூர்த்தி செய்வது போல் தான் நடந்து கொள்வர் .


மற்ற துறைகளில் இருப்பவர்கள் அரசியலுக்கு வரப் பயப்படுவது ஏன்? இன்னும் மன்னர் ஆட்சி தான் நடந்து கொண்டு இருக்கிறதா?அரசியல் வாதிகளின் வாரிசுகளுக்குப்  பின்னால் மக்கள் ஒளிவது ஏன்? கேடு கெட்ட அரசியல் வாதிகளை அவன் பிழை செய்தவன் என்று தெரிந்தும் அவனையே மீண்டும் தெரிந்து எடுப்பது ஏன் ?அரசியல் என்ற வார்த்தையே அசிங்கமாகிப் போனது ஏன்? நல்ல பள்ளிக்கூடத்தில் பிள்ளைகளை சேர்ப்பது, நல்ல பொண்ணைப் பார்த்து திருமணம் செய்வது நல்ல உத்தியோகத்தை தேடிப்  எடுப்பது என வாழ்க்கையில் ஒவ்வொரு நிலைகளிலும் யோசித்து முடிவெடுக்கும் நாம், நம்மை ஆட்சி செய்யும் மாந்தர் களிடத்தில் கோட்டை
 விடுவது ஏன்? 


இப் பொதுத் தேர்தலிலாவது மக்கள் ஏன்  என்ற என் கேள்விக்குப் பதில் காண்பார்களா ?
                                  NDPHR  ஸ்தாபகர் மொஹிடீன் பாவா
Loading...