குவைத் ஜூலை 16- குவைத் வங்கியில் பிச்சைக்காரர் ஒருவருக்கு சுமார் 10 கோடி பணம் உள்ளது. குவைத் ,கத்தார், சவூதி அரபியா போன்ற நாடுகளில் பிச்சை எடுக்க னுமதி கிடையாது.
இதனிடையே, குவைத்தில் காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுப்பட்டிருந்த போது,பிச்சைக்காரர் ஒருவர் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார்.அவரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.விசாரணையில் அந்தப் பிச்சைக்காரர் அங்குள்ள வங்கியில் 10 கோடி ரூபாய் போட்டு வைத்திருப்பது தெரிய வந்தது.
பொதுமக்களை ஏமாற்றியதற்காக பிச்சைக்காரர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.மேலும்,கைதான பிச்சைக்காரர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனிடையே, குவைத்தில் அதிகமான பிச்சைக்காரர்கள் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். கடந்த மாதத்தில் மட்டும் 22 வெளிநாட்டு பிச்சைக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களில் பெரும்பாலானவர்கள் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது அதிர்ச்சி அளிக்கிறது.