நியூ யோர்க் ஜூலை 16- முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் எச்.டபில்யூ.புஷ் கழுத்தெலும்பு உடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது குறித்துப் பேசிய புஷ்ஷின் செய்தித் தொடர்பாளர் வீட்டில் ஓய்வு எடுத்துக் கொன்டிருந்தப் போது கீழே விழுந்து கழுத்தெழும்பு உடைந்து விட்டதாக அவர் தெரிவித்தார்.
தற்போது புஷ் நலமாக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
1989 -ஆம் ஆண்டு முதல் 1993 -ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் அதிபராக ஜார்ஜ் எச்.டபிள்யூ.புஷ் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
