எதிர்வரும் பொதுத் தேர்தலில் 113க்கு மேல் ஆசனங்களை வெற்றி பெற்று மஹிந்த ராஜபக்ஷ இந் நாட்டின் பிரதமராவது நிச்சயமாகு மென்று முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரவித்தார்.
இது தொடர்பாக வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவிக்கையில் ஏகாதிபத்தியவாதிகளின் திட்டத்திற்கு அமைய சந்திரிக்கா, ரணில் உட்பட அனைத்துவிதமான சதிகாரர்கள் இணைந்து ஏற்படுத்திய பொறி தகர்க்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளை சுற்றியுள்ள மக்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை மீண்டும் ஒற்றுமைப்படுத்த வேண்டும்,
இன்று மைத்திரியின் ஆதரவாளர்களாக இருந்தவர்களின் முகத்திரை கிழிந்துள்ளது. எதிர்வரும் பொதுத் தேர்தலில் எமக்கு 107 ஆசனங்கள் கிடைக்கும். இதனோடு இடதுசாரிகளும் ஒன்றிணையும் போது 113க்கு மேல் ஆசனங்கள் கிடைக்கும்.
எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எமது அணி சந்தித்து பேச்சுவாரத்தைகளை நடாத்தவுள்ளது என்றும் வாசுதேச நாணயக்கார தெரிவித்துள்ளார்.
|
Monday, 6 July 2015
எதிர்வரும் பொதுத் தேர்தலில் 113க்கு மேல் ஆசனங்களை மஹிந்த ராஜபக்ஷ பெற்று பிரதமராவது நிச்சயம்-- வாசுதேவ நாணயக்கார |
Loading...