Tuesday, 7 July 2015

20 ஆசனங்களைக் குறிவைக்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

sumanthiran-sam-mavai
வரும் ஓகஸ்ட் 17ஆம் நாள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 20 ஆசனங்களைக் கைப்பற்றும் என்று நம்புவதாக, கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்று நடந்த கூட்டமைப்பின் உயர் மட்டக் கூட்டத்துக்குப் பின்னர் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அதேவேளை, நேற்று நடந்த கூட்டத்தில் 2004ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 22 ஆசனங்களை கூட்டமைப்பு வெற்றிகொண்டதைச் சுட்டிக்காட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், யாழ்ப்பாண மாவட்டத்தில் இரண்டு ஆசனங்கள் குறைக்கப்பட்டுள்ளதால் இம்முறை 20 ஆசனங்களைக் கைப்பற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
20 ஆசனங்களைக் கைப்பற்றுவதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வலுவான பேரம் பேசும் சக்தியாக உருவாக்கும் இலக்குடன் தேர்தலை எதிர்கொள்ளுமாறும் இரா.சம்பந்தன் கேட்டுக் கொண்டுள்ளார்.
Loading...