Wednesday, 15 July 2015

2100 இல் கடல் மட்டம் உயரும் அபாயம் :விஞ்ஞானிகளின் ஆய்வு


news
கடல் வளங்கள் பாதுகாக்கப்படாவிட்டால் 2100ஆம் ஆண்டளவில் கடல் மட்டம் 6அடி 6 அங்குலம் உயரும் அபாய நிலை ஏற்படும் என்று விஞ்ஞானிகளின் ஆய்வில்  கண்டறியப்பட்டுள்ளதாக மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரன் தெரிவித்தார்.
 
இன்று போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மீள்கட்டுமான வாழ்வாதார உதவித்திட்டம் தொடர்பான ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
மேலும் அவர் உரையாற்றுகையில்,
 
அமெரிக்க அரசால் அழைக்கப்பட்ட கடல் வளம்  சார்ந்த கருத்தரங்கு ஒன்றிற்கு அமெரிக்கா சென்றிருந்தான்.அதில் 16 நாடுகள் பங்குபற்றியிருந்தன.குறித்த கருத்தரங்கு கடல் வளங்கள் பாதுகாப்பு,கடல் வளங்களை பாதுகாப்பதன் நோக்கம் என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
 
மேலும் கடல் வளங்களை பாதுகாக்காமல் விட்டால் 2100 ஆண்டளவில் 6அடி 6அங்குலம் கடல் மட்டம் உயரும் அபாய நிலை தோன்றும் என விஞ்ஞானிகளின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Loading...