நாசா, ஜூலை 15- சூரியக் குடும்பத்தில் உள்ள அத்தனை கிரகத்தையும் பார்த்து விட்டோம் என்ற மட்டற்ற மகிழ்ச்சியில் திளைத்துள்ளது நாசா.
இதன் மூலம் சூரியக் குடும்பத்தில் உள்ள அனைத்துக் கிரகங்களுக்கும் விண்கலம் மூலம் போய் வந்த ஒரே நாடு அமெரிக்கா என்ற பெருமையும் நாசாவுக்குக் கிடைத்துள்ளது.
புளூட்டோ பயணம் வெற்றிகரமாக அமைந்ததை நாசா விஞ்ஞானிகள் பெரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.