Friday, 31 July 2015

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆக அதிகரிப்பு

கொழும்பில், இன்று நண்பகல் ஐதேகவின் தேர்தல் பரப்புரையார்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளதாக, கொழும்பு தேசிய மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொட்டாஞ்சேனை புளூமென்டல் வீதியில் நடந்த இந்தச் சம்பவத்தில், பெண் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மற்றொருவர் மரணமாகியுள்ளார்.
அதேவேளை, மேலும் 13 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், கொழும்பு தேசிய மருத்துவமனை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
unp-shoot (1)unp-shoot (2)
அதேவேளை, தாக்குதல் நடத்தி விட்டு இரண்டு வாகனங்களில் தப்பிச் சென்றவர்களைப் பிடிக்க சிறிலங்கா காவல்துறையினருடன் இணைந்து, சிறிலங்கா படையினரும், தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.
எனினும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
Loading...
  • தொடர்ந்தும் பழிவாங்கப்படுவதாக கோத்தபாய புலம்பல்09.01.2016 - Comments Disabled
  • NFGG யின் சாயம் வெளித்து விட்டது11.07.2015 - Comments Disabled
  • ஐஸ்வர்யாராயின் நகைக்கடை விளம்பரம் நிறுத்தம்29.04.2015 - Comments Disabled
  • Chandrika Still Sabotaging Constitutional Council12.11.2015 - Comments Disabled
  • கிழக்கு முதல்வர் ஹாபிஸ் நசீர் அஹமட். பிரஞ்சு உயர்ஸ்தானிகர் சந்திப்பு / பிரதமர் ரணில் சந்திப்பு வீடியோ01.03.2017 - Comments Disabled