கிர்க
இலங்கையின் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் நடத்திய துப்பாக்கி தாக்குதலில் ஒரு பெண் கொல்லப்பட்டார். 12 பேர் காயமடைந்திருக்கிறார்கள்.
தலைநகர் கொழும்பில் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்துகொண்டிருந்தவர்கள் மீது வாகனத்தில் வந்த துப்பாக்கிதாரிகள் சுட்டனர்.
அடுத்த மாதம் நடக்கவிருக்கும் இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் நடக்கும் முதலாவது மிகப்பெரிய வன்முறைச் சம்பவம் இதுவே.
இந்த தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி சார்பில் பிரதமர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்க போட்டியிடுகிறார்.
மறுபுறத்தில் அவருக்கு எதிராக களத்தில் நிற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியைப் பிடிக்க களமிறங்கியிருக்கிறார். ஆனாலும் அவரது கட்சியின் தலைவரும் தற்போதைய ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேன மஹிந்தவை பிரதமர் பதவிக்கு ஆதரிக்காதது மட்டுமல்ல, அவரை அரசியலைவிட்டு விலகும்படியும் கோரியிருக்கிறார்.