|
2015ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜுலை 16 வரை டெங்கு காய்ச்சலினால் 17 000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.டெங்கு நோயால் பாதிக்கப்பட்டோரில் 50 வீதமானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர்.
கொழும்பு மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் .இனங்காணப்பட்டுள்ளனர்.இரண்டாவது இடமாக கம்பஹாவும் மூன்றாவது இடமாக மட்டக்களப்பும் வகிக்கின்றது
கட்டுமானத் தளங்கள், பூர்த்தியாகாத கட்டிடங்கள் மற்றும் நகர்ப்புறம் ஆகியன நுளம்பு பெருகும் முக்கிய இடங்களாக உள்ளன.
டெங்கு நுளம்புகள் நீர் இன்றி ஒரு வருடத்திற்கு மேலாக உயிர்வாழத்தக்கவையாகும். சுத்தமான அல்லது அசுத்தமான நீர் தேங்கி நிற்கும் சிறிய போத்தல் அல்லது காய்ந்த இலைகளில் தேங்கி நிற்கும் நீர் என்பன இந்நுளம்பு இனப்பெருக்கத்திற்கு முக்கிய காரணிகளாகும்..
|
Friday, 17 July 2015
![]() |
மீண்டும் டெங்கு காய்ச்சலினால் கடந்த 6 மாதத்தில் 17000 பேர் பாதிப்பு |
Loading...
