
இலங்கை ரூபவாஹினியின் நேத்ரா அலைவரிசையில் இம் முறை நோன்புப் பெருநாள் விசேட நிகழ்ச்சிகள் சனிக்கிழமை பெருநாளாக அமையுமாயின் மாலை 3 மணி முதல் 6.30 மணிவரையும்ää ஞாயிறு தினம் பெருநாளாக அமையின் காலை 9.30 முதல் பி.ப. 1.30 மணிவரை இடம்பெறும் என முஸ்லிம் சேவை பணிப்பாளர் எம்.கே.எம்.யூனூஸ் அறிவித்துள்ளார். இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனிபா பாடல்கள் சிறுவர் பாடல்களுடன் நிந்தவூர் உசனார் ஸலீம் எழுதி மபாஹிர் மௌலானா நெறிப்படுத்திய “கருணை உள்ளங்கள்” நாடகமும் ஒளிபரப்பாகும். தொடர்ந்து தமிழ்த் தென்றல் அலி அக்பர் தலைமையில் “திண்ணைத் தென்றல் கவியரங்கு இடம்பெறும். கவியரங்கில் கலாபூஷணம் இஸ்மா லெப்பைää கலாபூஷணம் யாழ் அஸீம்ää ரஷீத் எம். றியாழ் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். அஸாரியா பேகம் தயாரித்தளிக்கும் “இசைத்தென்றல்” இஸ்லாமிய கீத நிகழ்ச்சியில் கலைக்கமல்ää பௌமி றவூப்ää நூர்ஜஹான் மர்சூக்ää உபைதுல்லாஹ் மஹ்தூம்ää டொக்டர் ஜெமீல் ஆகியோர் பாடுகின்றனர். பாடல்களை என்.நஜ்முல் ஹ{சைன்ää எம்.எஸ்.தாஜ்மஹான்ää எஸ்.ஜனூஸ்ää மடவளை நிசார் ஆகியோர் இயற்றியுள்ளனர்.
சீ.டி.எம். ஷியாம் தயாரித்து வழங்கும் “ஸலாமத்” எனும் மலாய் மொழி நிகழ்ச்சியும் நடைபெறும்.
இந்நிகழ்ச்சித் தொடரில் அஷ்ஷெய்க் இஸட்.ஏ. அஷ்ரப் நளீமி கலந்து விளக்க உரை வழங்க மபாஹிர் மௌலானாää முபாரக் மொஹிதீன்ää எஸ்.எல்.எம். றிலா அஹ்மத் எம் நஸீர் ஆகியோர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குகிறார்கள். நிகழச்சிகள் யாவும் முஸ்லிம் சேவை பணிப்பாளர் எம்.கே.எம்.யூனூஸ் அவர்களின் வழிகாட்டலில் இடம்பெறும்.
