Saturday, 4 July 2015

ஆத்திரமடைந்த மேர்வின்

Mervin-gets
கடந்த சில தினங்களுக்கு முன்னர் களனி விகாரையில் வழிபாடுகளை மேற்கொள்ளும் பொருட்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க அங்கு சென்றுள்ளார் இதன்போது அரசியல்வாதிகள் சிலரும் சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை மேர்வின் சில்வாவும் , சந்திரிக்காவை சந்தித்து உரையாட பகீரத பிரயத்தனம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
வழிபாடுகளின் பொருட்டு உள்ளே சென்ற சந்திரிக்கா வெளியே வரும் வரை அவர் களனி விகாரை பிரதேசத்திலேயே காத்திருந்த தாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் சந்திரிக்கா மேர்வினை கவனத்தில் கொள்ளவில்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறு முயன்றபோதிலும் மேர்வின் பேசுவதை சந்திரிக்கா அலட்சியம் செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் சந்திரிக்கா அங்குள்ள தேவாலயமொன்றுக்கு சென்றதாகவும் இதன்போது மேர்வின் சில்வா அங்குள்ளவற்றை தானே நிர்மாணித்ததாக உரக்கக் கூறியுள்ளார்.
இதன்போது பதிலளித்துள்ள சந்திரிக்கா , அதனால் தான் களனியில் இருந்த தெய்வங்கள் அங்கிருந்து சென்று விட்டதாக தெரிவித்ததாக கூறப்படுகின்றது.
இதனைக் கேட்டு ஆத்திரமடைந்த மேர்வின் அங்கிருந்து சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
Loading...