வியன்னா, ஜூலை 15 - ஈரானுடனான வரலாற்று சிறப்புமிக்க அணுசக்தி ஒப்பந்தம் உருவாவதில், முக்கியப் பங்கு வகித்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, ஈரான் வெளியுறவு அமைச்சர் ஜாரீப் ஆகியோருக்கும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்க சுவீடன் நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.
கடந்த 20 ஆண்டுகலில் ஈரானுடனான அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் அணுசக்தி கட்டுப்பாட்டு ஒப்பந்தம் என்பது வரலாற்று சிறப்புமிக்க ஒன்றாகும். இந்த ஒப்பந்தத்தின் மூலம், ஈரான் ஆக்கப்பூர்வமான அணுசக்தி திட்டங்களை செயல்படுத்தும். இதன்மூலம் ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் விலகும்.
இந்த ஒப்பந்தம் உருவாகக் காரணமாக இருந்த அமெரிக்காவின் வெளியுறவு துறை அமைச்சர் ஜான் கெர்ரி, ஈரானின் வெளியுறவு துறை அமைச்சர் முகமது ஜாவத் ஜாரித் ஆகியோர் 2016-ஆம் அமைதிக்கான நோபல் பரிசு வழங்க பரிந்துரைக்கிறோம் என சுவீடன் அமைப்பு தெரிவித்துள்ளது.
