Saturday, 11 July 2015

சோளத்தில் உள்ள மருத்துவ குணங்கள் !

images_22







கோதுமையில் உள்ள புரோட்டீனை விட சோளத்தில் உள்ள புரோட்டீன் சிறப்பு வாய்ந்தது. சோளத்திலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் குணம் உடலுக்கு நல்ல பலத்தையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கக் கூடியதாகும்.
குடல் புற்றுநோயை தடுக்கக்கூடிய சக்தி வாய்ந்தது சோளமாகும். சோளத்தில் உள்ள சத்துக்கள் உடல் செரிமான சக்தியை அதிகளவு இல்லாமலும் குறைந்த அளவு இல்லாமலும் பார்த்துக் கொள்கிறது. இதனால் இரத்தத்தில் உறிஞ்சப்படும் சர்க்கரையின் அளவு சம நிலையில் உள்ளதால் கண்டறியப்பட்டுள்ளது.
மக்காசோளத்தில் உள்ள ஃபோலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு இல்லாமல் போனால் குழந்தையின் எடை குறையும் மற்றும் மூளை வளர்ச்சியும் குறையும். நல்ல கண் பார்வை மற்றும் தோலுக்கு மக்காசோளம் சிறந்தது.
Loading...