முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் வரப்பிரசாதங்கள் குறைக்குமாறு தேர்தல்கள் ஆணையாளரிடம் ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த கோரிக்கையை நேற்று விடுக்கப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் உள்ளிட்ட இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை குறைக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய பொலிஸ் மா அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடன் நேற்று முன்தினம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது தேர்தல்கள் ஆணையாளர் இதனை தெரிவித்திருந்தார்.
