Sunday, 12 July 2015

'திருப்பியனுப்பப்பட்ட சீன- உய்கர்கள் ஜிஹாதிகள் ஆகும் நோக்குடன் சென்றவர்கள்'

உய்கர் இனத்தவர்கள் சீன அரசின் ஒடுக்குமுறையிலிருந்து தப்பி நாட்டைவிட்டு வெளியேறுவதாகவும் கருத்துக்கள் உள்ளன
தாய்லாந்திலிருந்து சீனாவுக்கு அண்மையில் திருப்பியனுப்பப்பட்டிருந்த நூற்றுக்கும் அதிகமான சீனாவின் உய்கர் இனத்தவர்கள், ஜிஹாதிகள் ஆகும் நோக்கத்துடன் மத்திய கிழக்கு நோக்கி சென்றுகொண்டிருந்தவர்கள் என்று சீனாவின் அரச செய்தி ஊடகம் கூறுகின்றது.
குறித்த உய்கர் இனத்தவர்கள் பொலிஸ் அதிகாரிகள் புடைசூழ, தலைப்பகுதி மூடப்பட்ட நிலையில் சீனாவுக்கு திருப்பியனுப்பப்பட்ட காட்சிகளை சீனாவின் தேசிய தொலைக்காட்சி ஒளிபரப்பியிருந்தது.
கடந்த வியாழன்று அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டமைக்கு ஐநாவும் அமெரிக்காவும் மனித உரிமை குழுக்களும் கோபத்துடன் கண்டனம் வெளியிட்டிருந்தன. அவர்கள் சித்திரவதைக்கு உள்ளாகலாம் என்ற அச்சமும் வெளியிடப்பட்டிருந்தது.
சீனாவின் க்ஷின்ஜியாங்க் பிராந்தியத்தைச் சேர்ந்த இந்த உய்கர் இனத்தவர்கள், சீன அரசின் ஒடுக்குமுறையிலிருந்து தப்பி நாட்டைவிட்டு வெளியேறியவர்கள் என்ற கருத்துக்களும் உள்ளன.
Loading...