கிரேக்கத்தின் கடன்நெருக்கடிக்கு தீர்வுகாணும் முயற்சியாக யூரோவலய நிதியமைச்சர்கள் பிரசல்ஸில் இன்று கூடி பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
நேற்று சனிக்கிழமை 9 மணிநேரம் நடந்த 'மிகவும் சிரமமானது' என்று வர்ணிக்கப்பட்டிருந்த பேச்சுவார்த்தை உடன்பாடு எதுவும் இன்றி முடிவுக்கு வந்தது.
புதிய கடன்மீட்பு உதவித் திட்டத்தின் கீழ் சுமார் 70 பில்லியன் யூரோ பணத்தை கிரேக்கம் எதிர்பார்க்கின்றது.
பதிலுக்கு, அரச செலவினங்களில் மேலும் குறைப்புகளை கொண்டுவர வேண்டும் என்று கிரேக்கத்திடம் கோரப்படுகின்றது.
இன்று மாலையில் யூரோவலய நிதியமைச்சர்களை யூரோவலய அரசு தலைவர்கள் சந்திக்கவுள்ளனர்.
கிரேக்கம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரும்வரை இந்த சந்திப்பு தொடரும் என்று ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் டொனால்ட் டஸ்க் கூறியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய அரசு தலைவர்கள் 28 பேரும் இன்றுமாலை கலந்துகொள்ளவிருந்த மாநாடு ஒன்றையும் டொனால்ட் டஸ்க் ரத்துசெய்துள்ளார்.
