|
மிகப் பழைமை வாய்ந்த குர்ஆன் நூலொன்றின் சிதைவடைந்த துண்டுகள் இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் கிடைக்கப்பெற்றுள்ளன. கிடைக்கப்பெற்ற புனித குர்ஆன் நூலின் சிதைவடைந்த பக்கங்களானது மனித கையெழுத்தினால் உருவாக்கப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது.
இந்த புனித நூல், சுமார் 1370 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என தெரிவிக்கப்படுகின்ற நிலையில், பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் கண்டெடுக்கப்பட்ட குறித்த புனித நூலானது, பல நூற்றாண்டுகள் இனங்காணப்படாமல் இருந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
குறித்த நூலானது, ‘மத்திய கிழக்கு நாட்டுப் புத்தகங்கள் எனும் தொகுப்பில் வகைப்படுத்தப்படாத புத்தகங்கள் எனும் பகுதியில் காணப்பட்டதாக பிரித்தானிய நூலக நிபுணர் டாக்டர் முஹம்மட் ஐசா வெலி தெரிவித்துள்ளார்
|
Friday, 24 July 2015
![]() |
பழைமை வாய்ந்த குர்ஆன் கண்டெடுப்பு |
Loading...
