Friday, 24 July 2015

தேர்தல் விதிமுறைகளுக்கு அமைவாக பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு,தேர்தல் அலுவலர் நா.வேதநாயகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.















தேர்தல் விதிமுறைகளுக்கு அமைவாக கட்சிகளையும் சுயேட்சைக்குழுக்களையும் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு யாழ். மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் நா.வேதநாயகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் நீதியானதும், 

சமாதானமான முறையில் நடைபெற ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டுமென ஆங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களின் தலைவர்களுடன் இன்று புதன்கிழமை கலந்துரையாடல் இடம்பெற்றது. 

சட்டவிரோதமான செயல்களை கட்டுப்படுத்துவதற்கும், யாழ். மாவட்ட செயலகம் உட்பட ஏனைய 4 பிரதேச செயலகங்களில் தேர்தல் முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கான முறைப்பாட்டு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

யாழ் மாவட்ட செயலகம், வேலணை, சாவகச்சேரி, பருத்தித்துறை மற்றும் சண்டிலிப்பாய் ஆகிய பிரதேச செயலகங்களில் தேர்தல் வன்முறை குறித்த முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படும். ஆந்த முறைப்பாட்டு நிலையங்களில் பொலிஸ் உத்தியோகத்தர்களும் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் கூறினார். 

தேர்தல் விதிமுறைகளுக்கு அமைவாக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்கள் தமது தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மேலும் கூறினார். மாவட்டத்தில் தேர்தல் வன்முறைகள் பாரியளவில் நடைபெறவில்லை என்றும் பொலிஸார் தெரிவத்தாட்சி அலுவலருக்கு தெரிவித்தமைக்கு அமைவாக எதிர்காலத்திலும் இந்த நடைமுறையினை கடைப்பிடிக்குமாறும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதே போன்று தேர்தல் நிறைவு பெறும் வரையும் ஒத்துழைப்பு வழங்குமாறும் யாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் அரசியல் கட்சிகளிடமும், சுயேட்சைக்குழுக்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Loading...