Saturday, 4 July 2015

யாழ்ப்பாணத்தில் உதயமான ஜனநாயக போராளிகள் கட்சி

..
தமி­ழீழ விடு­தலைப் புலிகள் இயக்­கத்தின் முன்னாள் போரா­ளிகள், ஆத­ர­ வா­ளர்கள், நலன் விரும்­பி­களின் பங்­கேற்­புடன் ஜன­நாயகப் போராளிகள் கட்சி உத­ய­மா­கி­யுள்­ளது. அத்­துடன் எதிர் வரும் பொதுத்­தேர்­தலில் வடக்கு, கிழக்கு தேர்தல் மாவட்­டங்­களில் தமிழ்த் தே­சியக் கூட்­ட­மைப்பின் வேட்­பாளர் பட்­டியலில் போட்­டி­யி­டு­வ­தற்­காக தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­களின் முன்னாள் பிர­தி­நி­தி­க­ளுக்கு தலா இரண்டு ஆச­னங்­களை வழங்­க­வேண்டும் என் கூட்­ட­மைப்­பிடம் கோரு­வ­தற்கும் அக்­கட்சி தீர்­மா­னித்­துள்­ளது. இது தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, முன்னாள் விடு­தலைப் புலி­களின் இயக்கப் போரா­ளி­களின் பிர­தி­நி­தி­களும் அவர்­க­ளது ஆத­ர­வா­ளர்­களும், நலன்­வி­ரும்­பி­களும் நேற்று வெள்ளிக்­கி­ழமை காலை யாழ்ப்­பா­ணத்தில் ஒன்று கூடினர்.

பொதுத்­தேர்தல் நெருங்­கி­வரும் தற்­போ­தைய அர­சியல் சுழ்­நி­லையில் தாம் ஆற்­றக்­கூ­டிய, ஆற்­ற­வேண்­டிய, ஜன­நா­யகப் பங்­கு­பணி குறித்து சுமார் மூன்று மணி நேர­மாக ஆராய்ந்­தனர். இவ்­வொன்று கூடலில் யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு, மன்னார், வவு­னியா, மட்­டக்­க­ளப்பு மாவட்­டங்­களைச் சேர்ந்த சிரேஷ்ட போரா­ளிகள் பலர் கலந்­து­கொண்­டனர்.

இக்­கூட்­டத்தில் எடுத்­துக்­கொள்­ளப்­பட்ட முக்­கிய தீர்­மா­னங்கள் வரு­மாறு, முன்னாள் போரா­ளிகள், அவர்­களின் ஆத­ர­வா­ளர்கள், நலன்­வி­ரும்­பிகள் ஆகி­யோரை ஒன்­றி­ணைத்து ஜன­நா­யகப் போரா­ளிகள் (ஊச­ர­ள­ய­ன­ந­சள கழச னுந­அ­ழ­உ­ச­ய­உல) கட்சி என்ற அமைப்பில் அர­சியல் செயற்­பா­டு­களில் முழு மூச்­சாக ஈடு­ப­டு­வது. ஈடு­பா­டு­டைய பேரா­ளி­க­ளையும் ஆத­ர­வா­ளர்­க­ளையும் ஐக்­கி­யப்­ப­டுத்தி ஒரு புதிய கட்­டு­று­தி­யான அமைப்பை ஏற்­ப­டுத்­து­வது. அது­வரை அமைப்பின் ஒருங்­கி­ணைப்­பா­ள­ராக என்.வித்­தி­யா­தரன் செயற்­ப­டுவார்.

தமிழ்­பேசும் மக்­களின் ஒட்­டு­மொத்த நலன்­களை வென்­றெ­டுப்­ப­தற்­காக அதிர்­வுள்ள வகையில் செயற்­படும் ஒரு புதிய ஜன­நா­யக அர­சியல் கலா­சா­ரத்தை முன்­னெ­டுக்க வேண்­டிய தேவை எழுந்­துள்­ளது. இதனை நோக்­க­மாகக் கொண்டு முன்னாள் போரா­ளி­களும் அவர்­க­ளுக்கு உரித்­தான பங்­க­ளிப்பை இவ்­வி­ட­யத்தில் வழங்­கு­வ­தற்கு வகை செய்யும் விதத்தில், எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் வடக்கு, கிழக்கு தேர்தல் மாவட்­டங்கள் தோறும் தமது வேட்­பாளர் பட்­டி­யல்­களில் விடு­தலைப் புலி­களில் இயங்­கிய தலா இரு முன்னாள் போரா­ளி­க­ளை­யா­வது இணைத்­துக்­கொள்­ளும்­படி தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­மையைக் கோருதல், தமி­ழர்­களின் உரி­மை­களை ஈட்­டு­வ­தற்­கான ஜன­நா­யக நட­வ­டிக்­கை­களில் அர்த்­த­முள்ள வகையில் நேர்­மை­யு­டனும் நெஞ்­சு­ரத்­து­டனும் ஈடு­பட்டு, ஒரு முறை­யான அர­சியல் தலை­மைத்­து­வத்தை தமி­ழர்கள் மத்­தியில் நிலை­நி­றுத்தல், கடந்த கால இழப்­பு­க­ளினால் பாதிக்­கப்­பட்ட நமது மக்­களின் வாழ்­வா­தார வளங்­களைக் கட்டி எழுப்பி, புனர்­வாழ்வு, புன­ர­மைப்புப் பணி­களை உத்­வே­கத்­துடன் முன்­னெ­டுத்து, அர­சியல் கைதி­களின் வலியை நன்கு பட்­ட­றிந்து உணர்ந்­த­வர்கள் என்ற வகையில் அவர்­களின் விரைந்த விடு­த­லைக்கு அழுத்தம் தந்து அர்த்­த­முள்ள வகையில் பங்­க­ளித்தல், நீதி, நியா­ய­மான ஜன­நா­யக நட­வ­டிக்­கை­களில் அர்த்த சுத்­தி­யுடன் ஈடு­ப­டு­வதன் மூலம், தமிழ்ப்­பேசும் மக்­களின் இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­தரத் தீர்­வு­காண்­ப­தற்கு தமி­ழர்­க­ளுக்கும் தென்­னி­லங்­கையின் நியா­ய­மான அர­சியல் தலை­மை­க­ளுக்கும் இடையில் பல­மான இணைப்புப் பால­மாக விளங்­கத்­தக்க வகையில் வினைத்­தி­ற­னு­டனும் செயற்­ப­டு­வதல், உட்­பட எதிர்­வரும் பொதுத் தேர்­த­லை­யொட்டி மேற்­கொண்டு எடுக்­க­வேண்­டிய தந்­தி­ரோ­பாய உத்­திகள் குறித்தும் ஆராய்ந்து திட்­டங்கள் வகுக்­கப்­பட்­ட­தாக அக்­கட்சி அறி­வித்­துள்­ளது.

அத­னை­ய­டுத்து அறப்போர் நிகழ்த்தி, தன்­னையே ஆகு­தி­யாக்­கிய விடு­த­லைப்­பு­லிகள் அமைப்பின் தியாகி திலீபன் சாகும் வரை உண்­ணா­வி­ரதம் இருந்து மர­ண­ம­டைந்த நல்லூர் கோயில் வீதியில், நேற்று நண்­பகல் ஒன்­று­கூடி தியானம் அனுஷ்­டித்­த­வர்கள், அதற்கு முன்­ன­தான ஒன்று கூடலின் போது தாம் எடுத்­துக்­கொண்ட தீர்­மா­னங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு ஐக்­கி­யப்­பட்டுச் செயற்­ப­டு­வ­தென அங்கு பிர­திக்ஞை செய்­து­கொண்­டனர்.

தமிழரசுக்கட்சியின் தலைவருடன் இன்று மாலை முக்கிய சந்திப்பு இதேவேளை இன்று மாலை 4.30 மணிக்கு இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை. சேனாதிராஜாவை அக்கட்சி முதன்முதலாக சந்திக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. இச்சந்திப்பின்போது அக்கட்சியின் தீர்மானங்கள் கோரிக்கைகள் தொடர்பில் பேசப்படவுள்ளதாகவும் தெரியவருகின்றது. அதனைத் தொடர்ந்து எதிர்வரும் தினங்களில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனையும் சந்திப்பதற்கு தீர்மாத்திருப்பதாகவும் கூறப்படுகின்றது
Loading...