சிரியாவில், இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் இரண்டு பெண்களின் தலையை துண்டித்துக்கொன்றிருப்பதாக சிரிய செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த இரண்டு பெண்களும் அவர்களுடைய கணவர்களும் மாந்திரீகத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு தலை வெட்டிக்கொல்லப்பட்டதாக சிரிய ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளால் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்படும் முதல் பெண் சிவிலியன்கள் இவர்கள் என்று கூறப்படுகிறது.இதற்கு முன்னர் மோதலில் உயிரிழக்கும் குர்து இனப் பெண் போராளிகளின் தலைகளை இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் துண்டித்துள்ளனர். ஐ.எஸ். தீவிரவாதக்குழு இதற்கு முன்பு இராக்கில் மாந்திரீகத்தில் ஈடுபட்ட ஆண்களின் தலைகளைத் துண்டித்து தண்டித்திருக்கிறது. |
Saturday, 4 July 2015
மாந்திரீகம் செய்த குற்றச்சாட்டில் இரு பெண்கள் தலை துண்டிப்பு |
Loading...