Saturday, 4 July 2015

அதியுயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து மேலும் சில இடங்கள் மீள்குடியேற்றத்துக்காக விடுவிப்பு

வலிகாமத்திலுள்ள நகுலேஸ்வரம் அருகே மீள்குடியேற்றத்துக்காக காணி தயார் செய்யப்படுகிறது.
வலிகாமத்திலுள்ள நகுலேஸ்வரம் அருகே மீள்குடியேற்றத்துக்காக காணி தயார் செய்யப்படுகிறது.
இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் மேலும் ஒரு தொகுதி காணிகள் அங்கிருந்து இடம்பெயர்ந்தவர்கள் மீள்குடியேறுவதற்காக படையினரால் விடுவிக்கப்பட்டிருக்கின்றது.
இது தொடர்பாக வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் சிறிமோகனன் மற்றும் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தலைவர் சோமசுந்தரம் சுகிர்தன் ஆகியோருக்கு இராணுவ உயரதிகாரிகளினால் இன்று காலை அறிவித்தல் வழங்கப்பட்டதையடுத்து, அந்தக் காணிகளின் உரிமையாளர்கள் அங்கு சென்று காணிகளைப் பார்வையிட்டுள்ளனர்.
அத்துடன் அந்தப் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்கள் மீள்குடியேறுவதற்கு வசதியாக, காடடர்ந்துள்ள அந்தப் பிரதேசத்தைத் துப்பரவு செய்யும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.
வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் பொதுமக்களுக்குச சொந்தமான, அவர்களுடைய குடியிருப்பு காணிகளான ஆறாயிரத்துக்கும் அதிகமான அளவு ஏக்கர் காணிகள் அதியுயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு, அங்கு இராணுவத்தினரும் கடற்படையினரும் நிலை கொண்டிருக்கின்றார்கள்.
புதிய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் அங்கு 1200 ஏக்கர் காணிகளை மீள்குடியேற்றத்திற்காக விடுவிப்பதாகக் கூறிய அரசு அதற்கும் குறைவான அளவு காணிகளையே விடுவித்திருந்ததாகப் பலரும் குறை கூறியிருந்தனர். இந்த நிலையிலேயே இப்போது பொதுத் தேர்தல் ஒன்றை எதிர்நோக்கியுள்ள இந்த வேளையில் 34 குடும்பங்களுடைய காணிகள் மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டிருக்கின்றன.
Loading...