Tuesday, 7 July 2015

கடன் மீட்பு நிபந்தனைகளை ஏற்க கிரேக்க மக்கள் மறுப்பு; நிதியமைச்சர் பதவி விலகல்

வரூஃபாகிஸ்
யானிஸ் வரூஃபாகிஸ்
கிரேக்க நிதியமைச்சர் யானிஸ் வரூஃபாகிஸ் பதவி விலகியுள்ளார்.
கிரேக்கத்தை அதன் கடன்களிலிருந்து மீட்பதற்கு சர்வதேச சமூகம் உதவி முன்வைத்த திட்ட நிபந்தனைகளை கிரேக்க மக்கள் தீர்மானமாக நிராகரித்து சில மணி நேரங்களில் வரூஃபாகிஸ் பதிவி விலகுவதாக அறிவித்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர்கள் கூட்டத்தில் வரூஃபாகிஸ் பங்கேற்பதை யூரோவலய நாடுகள் சில விரும்பவில்லை என்பது ஏற்கனவே அவரிடம் தெரியப்படுத்தப்பட்டிருந்தது.
கிரேக்கத்துக்கு கடன் கொடுத்தவர்களின் கோபத்தை பெருமையோடு தான் ஏற்றுக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடன் கொடுத்தவர்கள் பயங்கரவாதிகள் போல நடந்துகொள்கிறார்கள் என்றும் கிரேக்க மக்களை இழிவுபடுத்த முயல்கிறார்கள் என்றும் ஞாயின்று வரூஃபாகிஸ் குற்றஞ்சாட்டியிருந்தார்.
ஞாயின்றைய மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை அடுத்து, பிரதமர் அலெக்ஸிஸ் சிப்ராஸ் கிரேக்க அரசியல் கட்சிகளை சந்தித்து, கடன் கொடுத்தவர்களுடன் இனி தான் நடத்தக்கூடிய புதிய கடன் மீட்சித் திட்டப் பேச்சுவார்த்தைகளில் தனது உத்தி என்ன என்று பகிர்ந்துகொண்டுள்ளார்.
Loading...