காசா நிலப்பரப்பில் ஒரே நேரத்தில் இடம்பெற்ற குறைந்தது ஐந்து குண்டுவெடிப்புச் சம்பவங்களில் ஹமாஸ் மற்றும் இதர இஸ்லாமிய ஜிகாதி குழுக்களின் உறுப்பினர்களின் வாகனங்கள் அழித்தொழிக்கப்பட்டுள்ளன.
எனினும் இந்தத் தாக்குதலுக்கு யார் காரணம் என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.
ஆனால் ஹமாஸுக்கு எதிரான அதிதீவிர இஸ்லாமியக் கொள்கைகளைக் கொண்ட சிறிய குழுக்கள் மீதே சந்தேகங்கள் எழும் வாய்ப்புகள் உள்ளன என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
இந்தக் குண்டு வெடிப்புகள் காசா நகரின் புறநகர்ப் பகுதியொன்றிலேயே இடம்பெற்றுள்ளன.
அந்தப் பகுதியில்தான், அண்மையில் இஸ்லாமிய அரசு என்று தம்மைக் கூறிக் கொள்ளும் குழுவின் தீவிரவாதி ஒருவரை ஹமாஸின் பாதுகாப்புப் படையினர் கொலை செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
