Thursday, 23 July 2015

பொருளாதார மாநாடு ஓகஸ்டில் ஆரம்பம்


news
இலங்கை வர்த்தக சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள வருடாந்த பொருளாதார மாநாடு 2015 எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 4ஆம் 5ஆம் திகதிகளில் கொழும்பு- சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
50 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதிக்கூடாக என்ற தலைப்பில் இம்மாநாடு நடைபெறவுள்ளது.
 
15ஆவது தடவையாக நடைபெறும் இம்மாநாடு கடந்த 2000மாம் ஆண்டு முதன்முதலில் இலங்கையில் நடத்தப்பட்டது. இதில் 8 கட்டங்களாக பிரிக்கப்பட்டு நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் ஆராயப்படவுள்ளது.
 
அரசாங்க கொள்கை வகுப்பாளர்கள், இம்மாநாட்டில் அரச மற்றும் தனியார் துறைசார் நிபுணர்கள், உயர் பொருளியலாளர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொள்ளவுள்ளனர்.
 
 இம்மாநாட்டில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் 0115588877 அல்லது 011 5588852 என்ற இலக்கங்களுடன் தொடர்புகொண்டு பதிவு செய்து கொள்ளலாம். பதிவுக்கான இறுதி இம்மாதம் 24ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading...