Thursday, 23 July 2015

தமிழ் வேட்பாளர்கள் முஸ்லிம்களுக்கு வாக்குச் சேர்க்கும் தரகர்கள்-- அரியநேத்திரன்



மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய சிங்கள கட்சிகளில் போட்டியிடும் தமிழர்கள் முஸ்லிம்களின் வெற்றிக்காக வாக்கு சேர்க்கும் தரகர்களாகவே செயற்படுவார்களே தவிர அவர்களால் வெற்றிபெற முடியாது.

தமிழன் என்பது ஒரு தனித்துவமான இனம் நாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பைத் தவிர எவரையும் ஆதரிக்கமாட்டோம் என சர்வதேசத்துக்கு காட்டு வகையில் தேர்தல் முடிவு அமைய வேண்டும் எனவும்,

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பயணமென்பது அபிவிருத்திக்கான பயணமல்ல நாங்கள் அபிலாசைக்கான பயணமொன்றை மேற்கொள்கிறோம். அந்த இலக்கை நோக்கி நாங்கள் சர்வதேச ரீதிய அரசியல் செய்து கொண்டிருக்கிறோம்.

இலங்கையிலே இருக்கக்கூடிய சிறுபாண்மை மக்கள் வடக்கு கிழக்கிலே வாழக்கூடிய மக்கள் நிரந்தரமாக அரசியல் உரிமை கொண்டவர்களாக சுதந்திரமாக வாழக் கூடிய இறுதி முடிவைப் பெற்றுக் கொள்ளும் ஒரு போராட்டத்தை நாங்கள் நடாத்திக் கொண்டிருக்கிறோம்.

தேர்தலில் தமிழ் மக்கள் நிச்சயமாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருக்கு வாக்களிக்க வேண்டும்.என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
Loading...